+91 98414 57414
English Version Hindi Version

எங்களை பற்றி

1968 - ம் வருடம் 3 - ம் மாதம் 3 - ம் தேதி திருவாளர் வீரப்பன் லட்சுமி அம்மாள் அவர்களுக்கு ஆறாவது மகனாக பிறந்தார் அவருடைய பத்து வயது முடிந்ததும் தந்தைக்கு உதவியாக இருந்து பிரம்பு சேர் செய்யும் தொழிலை கற்று தந்தைக்கு உதவியாக வாழ்ந்து வந்தான்.

தனது 19-வது வயதில் ராமாபுரம் என்ற ஊரில் லட்சுமி என்ற பெண்ணை நேசித்தார். ஆனால் அவருடைய திருமணத்திற்கு தாய் தந்தை உறவினர்கள் அனைவரும் கலப்பு திருமணத்திற்கு சம்மதம் தரவில்லை. லட்சுமி வேம்புலி அம்மன் ஆலயத்திற்கு சென்று விளக்கு பூஜை செய்து நான் விரும்பியவரை என்னிடம் அம்மன்தான் சேர்த்து வைக்க வெண்டும் என்று தினமும் வேண்டி வந்தார். அதுபோல யாருக்கும் தெரியாமல் அன்பரசும் தான் விரும்பும் பெண்ணை சேர்த்து வைக்கும்படி அம்மனிடம் வேண்டினார்.

கடைசியில் தானே தனித்து அம்மன் மேல் பாரத்தைப் போட்டு தனித்து பெண் விட்டாரிடம் பெண் கேட்டார். ஆனால் அன்பரசு அதை பற்றி எதையும் எதிர்பார்க்காமல் தானே தனித்து அவருடைய மூத்த சகோதரி துணையுடன் மிக எளிய முறையில் பதிவு திருமணம் செய்து 1 இந்து 1 முஸ்லீம் 1 கிருஷ்டியன் மூவர் முன்னிலையில் ஒரு அரச மரதடியில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி திருமணத்தை முடித்துக் கொண்டார். அன்று முதல் குடும்ப வாழ்கை ஆரம்பம் ஆனது. தனக்கு தெரிந்த பிரம்புத் தொழிலை செய்து தன் மனைவியை அன்புடன் பாசத்துடன் காப்பாற்றி வந்தார். அவருடைய மனைவி குடும்பத்தாரிடமும் எந்த வித உதவியையும் எதிர்பார்க்காமல் தனித்தே தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்க்கையில் எந்த வித கஷ்டங்களையும் தானே தாங்கி கொண்டு தன் மனைவிக்கு கூட கஷ்டங்களை கூறாமல் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து வாழ்ந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே முன்பு ரியல் எஸ்டேட் வியாபரத்தில் நிலம் வாங்கி கொடுத்த ஒருவர் வந்து நீங்க வங்கிக் கொடுத்த இடம் புறம்போக்கு இடம் எனக்கு வேண்டாம். என்னுடைய பணத்தை திரும்பி கொடுத்து விடுங்கள் என்று கூறி சச்சரவு ஏற்படுத்தினார்கள் அவர்களுக்கு பணம் கொடுக்க 2 மதங்கள் கழித்து தந்து விடுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவருக்கு பணம் கொடுக்க தீபாவளி பண்டு பிடித்தார் வேறு சிலரிடம் ஏல சீட்டு பிடித்தார். இரண்டு மாதம் கழித்து பண்டு பணமும் சீட்டு பணமும் சேர்த்து 4½ லட்சத்தை நிலம் வாங்கியவர்களுக்கு கொடுக்கபட்டது. ஆனால் 4 பேர்களுக்கு கடனை அடைக்க 400 பேர்களுக்கு கடன் பட்டார். அவர்களுக்கு தீபாவளி நெருங்கி கொண்டு இருக்கிறது. பண்டுக்கு 400 பேர்களுக்கு நகை வாங்கி தரவேண்டும் என்ற கவலையுடன் பணத்துக்காக அலைந்து கொண்டு, நண்பர்களிடம் பணத்துக்காக உதவி கேட்க அனைத்து நண்பர்களும் உதவி செய்யும் நிலையில் இல்லாததால் வேதனையுடன் குடிபழக்கத்தி்ற்கு அடிமை ஆனார்.

தீபாவளி பண்டிகையும் நெருங்கி வந்தது அன்பரசுக்கு பயமும் வந்தது இந்த சோதனையில் இருந்து மீள முடியாமல் வீட்டைக் கூட சரியாக கவனிக்க முடியாமல் திண்டாடினர் அந்த சமயத்தில் அன்பரசுவின் மனைவியின் தம்பி அவரது கம்பெனியில் பணம் ரூ.65 ஆயிரம் கொண்டு வந்து அன்பரசிடம் கடனாக கொடுத்தார், அன்பரசுவின் தம்பி ரூ.1 லட்சம் கடனாக கொடுத்தார. அன்பரசு நண்பர் ஒருவர் சேட்டு அவரிடம் சென்று பணத்தை கொடுத்து 65 ஆயிரம் வைத்து கொண்டு நகை கொடுங்கள் மீதி 6 மாதத்தில் தருகிறேன் என்று கூறி நகை வாங்கி கொண்டு தீபாவளி பணம் பிரித்து கொடுத்தார். இந்த சமயத்தில் அன்பரசு மனைவியின் உடல் நிலை மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள் மருத்துவரும் கர்பபை அகற்ற வேண்டும் என்று கூறி தற்காலிகமாக சில மருத்துவ மாத்திரைகள் கொடுத்து அனுப்பினார்.

ரியல் எஸ்டேட் வியாபாரம் மிகவும் சரிந்து விட்டது. எந்த வியாபாரமும் சரியாக நடைபெறவில்லை வருமானம் எதுவும் இல்லை வீட்டு சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் வறுமை நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக வீடு அடமானம் போடப்பட்டது. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

அன்று மாலை வேம்புலி அம்மன் கோயிலுக்கு சென்று கண்ணீர் விட்டு நான் என்ன குற்றம் செய்தேன். எனக்கு ஏன் எந்த நிலைமை இதற்கு மேல் நான் ஏன் உயிர் வாழ வேண்டும் என்னோட குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன் நீ சந்தோஷமாக இரு என்று கூறி விட்டு 4½ மணி அளவில் என் மனைவி மகள் தேவி பிள்ளைகள் விஜய் செல்வம் அனைவரும் தற்கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்தோம். காமாட்சி விளக்கு ஏற்றி வைத்து விட்டு இது தான் என்னுடைய கடைசி கண்ணீர் என்று கூறி கதறி அழும் சமயத்தில் ஒளி ஏற்பட்டது நீ சாகாதே என்னை நினைத்து 1 வருடம் கடுமையாக தவம் இருந்தால் உனக்கு சக்தி தருகிறேன் என்று என்னுடைய காதில் ஒளித்தது.

அன்று முதல் வீட்டிலேயே தனி அறையில் அம்மனை தியானித்து கடுமையான முறையில் தவத்தை செய்து வந்தேன் அதற்கு துணையாக என் மகன் செல்வம் எனக்கு துணையாக இருந்து தவத்திற்கு தொண்டு செய்தார் என்னுடைய மனைவியும் கடன்காரர்கள் யார் வந்தாலும் அவர் ஊருக்கு போய் இருக்கிறார் வந்த உடன் உங்களின் கடனை அடைத்து விடுவார் என்று கூறி அவர்களை அனுப்பி வந்தார்கள் 1 வருடம். கழித்து தெய்வ அருள் பெற்று அந்த சக்தியை தன்னுடைய மகன் செல்வத்தின் மேல் இறக்கினர் அதன் விளைவாக மகன் செல்வத்தின் மேல் சாமி ஆடி நான் சோட்டானிக்கரை பகவதி வந்து இருக்கிறேன் என்று கூறி ஆனந்தமாக ஆடி உன் குடும்பத்தை வாழ வைப்பேன் நீயும் நன்றாக இருப்பாய் என்று அருள்வாக்கு கூறினர்.

2001-ம் வருடம் மாலை 4.55 மணிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சூழல்காற்று மிக வேகத்துடன் வருவதை பூஜை அறையில் இருந்தபடியே வெளியே வந்து யாரும் வெளியே வராதீர்கள் என்று குறி நானும் குடும்பத்தோடு வீட்டின் மாடிக்கு மேலே போய் விட்டார். சில விநாடியில் சூழல் வந்து பூஜை அறையில் நுழைந்து பூஜை அறை கதவை படீர் என்று பெரிய சத்தத்துடன் மூடிக் கொண்டது. இதை அங்கு உள்ளவர்கள் அனைவரும் பார்த்து ஆச்சரியத்தில் நின்றார்கள். அன்பரசும் பயந்து படியே சிறிது நேரம் கழித்து பயத்துடன் பூஜை அறையை மெதுவாக திறந்து உள்ளே சென்று கற்பூர தீபம் ஏற்றினார் அப்போது ஒரு குரல்.

உலகத்தில் யாருக்கும் கிடைக்காத மாபெரும் சக்தியை உனக்கு தருகிறேன். இதை நல்லதிற்கு பயன்படுத்த வேண்டும். அம்மன் இறங்கி தானாக சுற்றி அருள் வாக்கு தரும் அம்மன் நீ எந்த பொருளை எடுத்தாலும் அதில் அம்மன் இறங்கி அனைவருக்கும் அருள்வாக்கு கூறவாய் நீ கூறும் வாக்கு பலிக்கும். மாதா மாதம் அம்மனுக்கு ஆடு, கோழி வெட்டி அம்மனுக்கு பூஜை செய்து அதை அன்னதானமாக ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும் அன்னதானம் சாப்பிடுபவர்கள் நோய், நொடி தீரும் கெட்ட சக்திகளை அழிக்கும் நல்லவர்களை காக்கவும் அம்மன் சக்தியை பயன்படுத்தவும் பூமாதேவியை கண்ணை மூடி சுற்றினால் தெய்வ அருள் கிடைக்கும், கெட்ட சக்தி விலகும் இன்றிலிருந்து 1 வருடம் கழித்து நீ ஒரு கோவிலை கட்ட வேண்டும். அம்மன் சக்தியாக 7 சக்தியை அந்த ஆலயத்தில் ஐக்கியபடுத்தி வை உனக்கும் உன் குடும்பத்திற்கும், எல்லா வசதி வாய்ப்பும் ஏற்படும் நீ இன்னும் 5 வருடம் கழித்து நீ உன் சொந்த குடும்பம், உற்றார் உறவினர்கள் விலகிவிடுவார்கள், ஊர் மக்களுக்காக நீ வாழுவாய்.

நான் கூறும் தெய்வ ரகசியத்தை யாரிடமும் கூற கூடாது என்று தெய்வ அருள் கூறி வரபிரசாதம் கிடைத்தது, நானும் மிகுந்த சந்தோஷத்துடன் என்னுடைய மகன் செல்வத்தை அழைத்து ஒரு பிரம்பு கொண்டு வந்து அதில் கயிறு கட்டி அம்மன் சக்தியை அழைத்து அருள் வாக்கு கேட்டேன். அன்பரசு கையில் இருக்கும் பிரம்பு தானாக சுற்றியது அதை என் மகனிடம் என் மனைவியிடமும் கூறினேன். அதைப் பார்த்து அவர்கள் கேலி பேசி ஏளனம் செய்தார்கள். எனக்கு எல்லா வசதி வாய்ப்புகளும் ஏற்படும் கடன் தொல்லைகள் தீர்ந்து விடும் 5 வருடம் கழித்து உங்களை விட்டு போய் விடுவேன் என்று கூறினேன் அதற்கு அவர்கள் 5 வருடம் கழித்து தானே இப்போது கடனை எல்லாம் அடைத்து எங்களை சந்தோஷமாக வாழவை பார்ப்போம் என்று ஏளனமாக பேசி கேலி செய்தார்கள்.

(குறிப்பு இந்த நிகழ்ச்சியை அன்பரசு சொல்லி என் அண்ணன் எழுதி கொண்டு இருந்த சமயம் 28.04.2006 அன்று 3.55 மணி அளவில் 108 டிகிரி வெயில் அடித்து கொண்டு இருந்து நேரத்தில் மேகம் தீடீர் என்று கருத்து பெரிய ஓசை சூழல் காற்று சுழன்றபடி கோவிலில் நுழைந்தது எழுதுவது தடைப்பட்டு நின்றது) தெய்வ அருள் கிடைத்த அன்று வந்த சூழல் இன்று வந்தது.

அன்று இரவு தூங்கி கொண்டு இருந்த போது 9 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை கையில் சூலத்துடன் என்னை அழைத்து நான் அம்மனே நேரில் வந்துள்ளேன். நீ என்னை நினைத்துக் கொண்டு எல்லா கோவில்களுக்கும் சென்றுவர வேண்டும் என்று கூறி மறைந்து விட்டார்கள் அதை என் விட்டில் காலையில் கூறினேன் அதை யாரும் நம்ம மறுத்து விட்டார்கள் இந்த ஆளுக்கு பைத்தியம் முற்றி விட்டது என்று ஒதுங்கி போய்விட்டார்கள்.

அன்று மாலை 5.00 மணி பூஜை அறையில் தியானத்தில் அந்த வழியாக ஒரு வாய் பேசமுடியாத ஊமை ஜோதிடர் வந்தார். அவரை என் மனைவி அழைத்து எனக்கு ஜோதிடம் பாருங்கள் என்று கூறினர். அதற்கு அந்த ஜோதிடர் உங்கள் வீட்டிலேயே பெரிய தெய்வ சக்தி இருக்கிறது, உங்களுக்கு இனி எந்த குறையும் இல்லை. கார், வீடு, வாசல் என்று எல்லா வசதி வாய்ப்பும் ஏற்பட போகிறது என்று கை சைகையாக கூறி சென்றார். இதை கேட்டதும் உண்மையில் தன் கணவருக்கு தெய்வ சக்தி இருக்கிறது என்று நம்பினார்கள்.

மறுநாள் முதல் அன்பரசு தானே அருள் கூற ஆரம்பித்தார் மகள் அருள்வாக்கு கேட்க வந்துகொண்டு இருந்தார்கள் அனைவரும் நல்ல பலனை அடைந்தார்கள். அன்பரசு கூரும் அருள்வாக்கு பலித்தது, சில நாட்கள் கழித்து மலையாளி பெண் ஒருவர் அருள்வாக்கு கேட்க வந்தார், அவர்களுக்கு அன்பரசு அருள்வாக்கு கூரியது நடந்தது. அவர்களும் சந்தோஷத்துடன் சாமி நீங்கள் சோட்டானிகரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு சென்று வாருங்கள் என்று கூறினர். அன்று அம்மன் நேரில் குழந்தை உருவில் வந்து கோவிலுக்கு போய்வர சொன்னதும் இந்த அம்மா கூறுவதும் ஒன்றாக இருக்கிறது என்று எண்ணி நானும் நீங்கள் கூறியது போல் சோட்டானிகரை பகவதி அம்மன் கோவிலுக்கு போய் வருகிறேன் என்று கூறினேன். அவர்களும் என்னிடம் 1000/- ரூபாய் கொடுத்து நீங்கள் போய் வாருங்கள் என்று கூறி சென்றார்கள். நானும் அன்று மாலை 5.00 மணிக்கு என் மனைவியிடம் ரூ.300/- கொடுத்து விட்டு செலவுக்கு வைத்துகொள் என்று கூறிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் சோட்டானிகரை பகவதி அம்மனை தரிசிக்க சென்றேன்.

காடு, மலை எல்லாம் சுற்றி எல்லா கோவில்களுக்கும் சென்று சோட்டானிகரை பகவதி அம்மனை அடைந்தேன் யாகபூஜை, செய்து அம்மனை சந்தோஷப்படுத்தி ஒரு மாதம் கழித்து வீடு வந்து சேர்ந்தேன். ஒரு மாதத்திற்கு பிறகு என்னை பார்த்ததும் எல்லோரும் இப்படி தனியாக எங்களை தவிக்க விட்டு போய் விட்டீர்களே என்று அழுதார்கள். நானும் நல்ல காரியத்துக்காக கோவில்களும் போய் வந்தேன் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். மீண்டும் வீட்டில் அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்தார்கள். சித்திராபவுர்ணமி வந்தது. துர்கை அம்மனை ஆராதனை செய்ய, பால்குடம் எடுக்க துர்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று காஞ்சிபுரம் சென்றார் பால்குடம் எடுத்தும் அங்கேயே அருள்வாக்கு சொல்லி அங்கு உள்ள மக்களுக்கும் தெய்வ அருளை கொடுத்தார். அனைவரும் பலன் அடைந்தார்கள் அன்பரசும் தன குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

வீட்டில் இருந்த மீண்டும் அருள்வாக்கு கூறினர் 15 நாள் கழித்து அம்மாவாசை வந்தது அன்று மலையனூர் அங்காளி கோவில்களுக்கு சென்று கோவிலில் அமர்ந்து அங்கு வரும் மக்களுக்கு அருள்வாக்கு கூறி தெய்வ அருளை அனைவருக்கும் கிடைக்க செய்தார். அம்மாவாசை பூஜைகளை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

ஒரு நாள் வீட்டில் அருள்வாக்கு கூறும் வேளையில் ஒருவர் தன் குடும்பத்துடன் அருள்வாக்கு கேட்க வந்தார் அவர் எங்களுக்கு ஒருவர் 60 ஆயிரம் தரவேண்டும் அதை தர மறுக்கிறார்கள். நீங்கள் தான் அந்த பணம் எங்களுக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும், என்று கூறி அருள்வாக்கு கேட்டார்கள். நானும் அம்மன் அருளால் இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு சேர வேண்டிய பணம் வந்து சேரும் என்று அம்மனை வணங்கி அவர்களுக்காக பூஜை செய்தேன். அவர்களுக்கும் அந்த பணம் கிடைத்த அவர்களும் என்னிடம் வந்து நீங்கள் கூறியபடி பணம் கிடைத்து விட்டது என்று கூறி காணிக்கையாக ரூ. 6,000/- தந்தார்கள். அதில் என்னுடைய மனைவியிடம் ரூ. 2 ஆயிரம் கொடுத்துவிட்டு மீது ரூ. 4 ஆயிரத்தை அம்மன் அருளை விளம்பரம் செய்யலாம் என்று போஸ்டர்கள் அடிக்க சொன்னேன்.

உலகில் யாருக்கும் கிடைக்காத வரபிரசாதம் அன்பரசுக்கு கிடைத்தது. அன்பரசு கையில் இருக்கும் பிரம்பில் அம்மன் இறங்கி அது தானாக சுற்றும் அதிசயத்தை பாருங்கள் அருள் கேட்க வாருங்கள் என்று விளம்பர போஸ்டர் அடித்து எல்லா இடங்களுக்கும் கொடுக்க செய்தேன்.

அதை பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். கூடவே போலீஸ் அதிகாரிகளும் வந்தார்கள்.

அன்பரசு சாமியிடம் தெய்வ சக்தி இருக்கிறது உண்மையா? பொய்யா? என்று விசாரணை செய்ய வந்தார்கள். தெய்வ சக்தி உள்ளது என்று தெரிந்து கொண்டு அம்மனை வாங்கி சென்றார்கள் ஆனால் போலீஸ்காரர்கள் வந்ததை பார்த்து அவரது உறவினர்கள் பயந்து விலகி விட்டனர்.

அன்பரசு சாமியும் பூஜை அறையில் இருக்கும் சமயத்தில் அவருடைய மனைவி அவரையும் அம்மனையும் திட்டி சண்டைபோட்டார் அன்று தெய்வ அருள் வந்து அவர் மனைவியை தலைமுடியை பிடித்து இழுத்து வந்து வீட்டிற்கு வெளியே போட்டுவிட்டு போய்விட்டார். அன்றிலிருந்து தெய்வத்தை திட்டுவதையும், சண்டை போடுவதையும் அவர்கள் நிறுத்தி தெய்வ பூஜையை தடை செய்யவில்லை.

இதில் இருந்து மாதாமாதம் தொடர்ந்து அன்னதானம் செய்தார். அன்னதானம் சாப்பிட அனைவரும் பலன் அடைந்தார்கள். அன்பரசும் எல்லோருக்கும் சிறு உதவிகளை செய்து வந்தார். விலகின உறவுகள் மறுபடியும் அவரிடம் உறவு கொண்டனர், தொடர்ந்து அருள்வாக்கு கூறி வந்தார்.

இந்த சமயத்தில் அன்பரசு அவர்களின் மனைவி உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. மாதவிடாய் தொடர்ந்து வெளியானது. ஆகையால் மனைவியை அழைத்துக் கொண்டு பெரிய மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கர்பப்பை அகற்ற வேண்டும் என்று கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவமனையில் சேர்த்து கொண்டார்கள். அன்பரசு மிகவும் மன வேதனையுடன் உறவினர் யாரும் அந்த சமயத்தில் உதவ மறுத்து விட்டனர். தானே தனித்து குழந்தைகளுக்கு சாப்பாடு செய்வது முதல் மனைவிக்கு பணிவிடை செய்வது வரை எல்லா வேலைகளையும் தானே செய்து மிகவும் கஷ்டங்களை அனுபவித்தார். அந்த தருணத்திலும் அருள்வாக்கு கூறி வந்தார்

மருத்துவமனையில் டாக்டரிடம் நோய் தீர்க்க வந்தவர்களுக்கு அருள்வாக்கு கூறி அவர்களுடைய கஷ்டங்களை அம்மன் அருளால் தீர்த்து வைத்தார். இந்த சூழ்நிலையில் பண கஷ்டம் ஏற்பட்டது அதை யாரும் அந்த சமயத்தில் கொடுத்து உதவ உறவினர்களோ, நண்பர்களோ முன்வரவில்லை. மருந்து வாங்க குழந்தைகளுக்கு சாப்பாடு செலவுக்கு கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் தன்னுடைய உடம்பில் இருந்து இரத்ததானம் செய்து அதில் அவருக்கு 1000/- ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தில் வாங்கி கொடுத்தார். பிள்ளைகளுக்கு சாப்பாடு செலவுக்கு கொடுத்தார்.

மறுநாள் அம்மனிடம் தான் இரத்ததானம் செய்துவிட்டேன். நான் செய்தது தவறா இருந்தால் என்னை மன்னித்துக்கொள் என்று அம்மனை வேண்டினார். நீ இரத்ததானம் செய்தது தவறு இல்லை என்று அம்மன் அருள் கூறியது. அவருடைய ரத்தம் O குரூப் இரத்தம் அன்று தான் அவருக்கு தெரிந்தது. அதனால் அவருடைய பெயரில் ஓம் என்ற எழுத்தை சேர்த்துக் கொண்டு அன்று முதல் ஓம் அன்பரசு என்று பெயர் விளங்கியது அவர் மனைவியிடம் மிகவும் பாசத்துடனும் அன்புடனும் இருந்து வந்தார்.

ஓம் அன்பரசு மீண்டும் தெய்வத்திற்கு பூஜை செய்து யாகங்கள் செய்து அம்மன் அருளால் மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார் தொடர்ந்து அன்னதானம் செய்து வந்தார். தன் மனைவி நல்லவிதமாக குணம் அடைந்து விட்டதால் கடல் கன்னி தேவதையை பூஜை செய்து தன்னுடைய மனைவி மேல் இறங்கி அவரும் அருள் வாக்கு கூற செய்தார். மற்றும் பிள்ளை விஜய்மேல் ஓம் காளி பகவதி அம்மனையும், நாகாத்தம்மா இரு தெய்வங்களையும் பூஜை செய்து விஜய் மேல் இறக்கி அவரையும் அருள்வாக்கு கூறவைத்தார். தனது கடைசி மகன் செல்வத்தை அழைத்து 17 தெய்வ சக்திகளை இறக்கி அருள்வாக்கு சொல்ல வைத்தார். தன்னுடைய மகள் தேவியை அழைத்து துர்கை அம்மனை பூஜை செய்து அவர்மேல் இறங்கி அருள்வாக்கு கூறவைத்தார்.

சக்தியை அனைவரும் அம்மன் அருளால் அருள்வாக்கு கூறும் சக்தியை அடைந்து தெய்வ வழிபாட்டில் நிலைத்து நல்லபடியாக வாழ்ந்து வந்தார்கள். மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து அருள் வாக்கு கேட்டு பலன் அடைந்தார்கள். அன்னதானம் தொடர்ந்து எந்த இடையூறும் இல்லாமல் மாதா மாதம் நடந்து வந்தது.

அப்படி பலன் அடைந்தவர்களிள் ஒருவர் நிலம் ஒன்று விற்க வேண்டி அன்பரசுவிடம் வந்தார்கள். அவர்களின் நிலத்தை 7 லட்சம் ரூபாய்க்கு விற்று தாருங்கள் என்று கூறினார்கள். அன்பரசும் தெய்வத்தின் அருளால் அவர்களின் நிலத்தை 11 லட்சத்திற்கு விற்று கொடுத்தார். அவர்களும் சந்தோஷத்துடன் அன்பரசுவிடம் 4 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனால் அன்பரசு அதை வாங்க மறுத்துவிட்டு எனக்கு காணிக்கையா? வேண்டாம் கடனாக கொடுங்கள் கோவில் கட்டும் பணிக்கு தேவை மாதாமாதம் வட்டி கொடுத்து விடுகிறேன். உங்கள் பெண்ணின் திருமணத்திற்கு முழு பணத்தையும் தந்து விடுகிறேன் என்று கூறி பணத்தை பெற்றுக் கொண்டார்.

அதை வைத்து அன்பரசு முன்னால் தம்பியிடம் கடன் பட்டதையும் மற்றும் லட்சுமியின் தம்பியிடம் ரூ.65 ஆயிரம் கடன் பட்டதையும் கொடுத்துவிட்டு கோவில் கட்டுவதற்கு இடம் பார்க்க ஆரம்பித்தார். அம்மன் அருள் கூறும் பிரம்பை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று கோவில் கட்டுவதற்கு இடம் பார்த்தார். கடைசியில் ராமச்சந்திரா மருத்துவமனை அருகில் பொன்னி அம்மன் கோவில் தெருவில் பிரம்பு சுற்றி அருள் கூறியதை ஏற்று அந்த இடத்தை வாங்கி கோவில் கட்டும் வேளையை ஆரம்பித்தார்.

ஓம்காளி பகவதி அம்மன் சிலையை 11½ அடி உயரத்திலும் அம்மன் சிலை 3½ உயரத்திலும் கருப்பு சாமி சிலை 3½ உயரத்திலும் பூமாதேவி சிலையும் செய்து சிறப்பாக கோவிலை கட்டி முடித்தார்.

கோவில் கட்டும் பணி முடிந்து கும்பாபிஷேகம் செய்ய விளம்பரம் செய்ய போஸ்டர்கள் அடிக்க சொல்லினர் 2004 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமி அன்று ஓம்காளி பகவதி அம்மன் ஆலயத்திற்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்யப்பட்டு அன்று முதல் நாட்டில் தண்ணீர் பஞ்சம் தீரும் சித்ரா பவுர்ணமி அன்று பெரிய மழை பெய்யும் என்று அனைவருக்கும் விளம்பரம் செய்து போஸ்டர்கள் கொடுக்கப்பட்டது மக்களும் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தார்கள் கூடவே சில அதிகாரிகளும் மழை வரவில்லை என்றால் அன்பரசுவை கைது செய்யலாம் என்ற என்னத்தில் காத்து இருந்தார்கள்.

சித்ரா பவுர்ணமியும் வந்தது தெய்வ வழிபாட்டில் கலந்து கொள்ள மக்களும் வெல்லம் போல் வந்தார்கள் அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு பெரிய மழையும் வந்தது பக்தர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு பலன் அடைந்தார்கள் வந்த அதிகாரிகளும் தெய்வ வழிபாட்டில் கலந்து கொண்டு தெய்வ அருளை பெற்று சென்றார்கள் அன்று முதல் ஓம்காளி அம்மன் தனி சிறப்பு பெற்று மாதா மாதம் பெரிய அளவில் அன்னதானம் நடைபெற்றது. அன்பரசு சாமிகளும் அம்மனை வேண்டி இன்னும் 2 ஆண்டு கழித்து பெரிய அளவில் கோவில் கட்டி கோபுரம் கட்ட வேண்டும் என்று அம்மனிடம் அருள் கேட்டார் அம்மனும் கோயில் கட்டுவாய், கோபுரமும் கட்டுவாய் என்று அருள் வாக்கு கொடுத்தது.

அன்று முதல் கோவில் திருப்பணியை மிகவும் கவனத்துடனும், பக்தியுடனும், ஓம் அன்பரசு செயல் பட ஆரம்பித்தார். அதன் விளைவாக அவருக்கு வேதனையும் ஏற்பட்டது. தன்னுடைய குடும்பத்தின் உறவினர்களால் வேதனையும் ஏற்பட்டது. மனைவி குழந்தைகள் யாரும் அவரிடம் பாசத்துடன் நடந்து கொள்ளவில்லை அவரிடம் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டதி அவர் மனதை வேதனைப் படுத்தினார்கள் எந்தவித வேதனைகளையும், கஷ்டங்களையும் அம்மனின் பாதத்தில் வைத்து விட்டு எல்லாம் உன் செயல் என்று கூறி மக்களுக்கும் தெய்வத்திற்கும் தொண்டுகள் செய்து வந்தார். தன்னுடைய மனைவி மக்களுக்கு நல்ல வசதி வாய்ப்புகளையும் செய்தார் வந்தார். மாதா மாதம் அன்னதானம் செய்து வந்தார் தன்னுடைய மகளுக்கு திருமணமும் சிறப்பாக செய்து வைத்தார்.

குடும்பத்தில் வேதனையும், விரக்தியும் அடைந்தாலும் அதை வெளியே யாருக்கும் சொல்லாமல் அம்மனிடம் கண்ணீரால் ஆராதணை செய்தார்.

மாதா மாதம் அன்னதானமும் மிகச் சிறப்பான முறையில் நடந்து வந்தது மக்களும் கூட்டங்கூட்டமாக வந்து அம்மனின் அருளை பெற்று சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தார்கள். ஓம்காளி அம்மனின் அருளால் ஓம் அன்பரசு சாமிகள் உதவியால் மக்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கோவில் கோபுரம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. அன்பரசு சாமிகள் எழுதப் படிக்க தெரியாதவர் இருந்தாலும் அம்மனை நினைத்து அவரே சொந்தமாக 9 பாடல்கள் பாடி உள்ளார். அதை கேசட்டில் பதிவு செய்து கோயில் வைத்துள்ளார்.

அம்மன் ஆலயத்தில் உள்ள குலத்தில் சிகப்பு கயிறு கட்டினால் கட்டியவர்களுக்கு நினைத்து காரியம் நடக்கும் அம்மன் அருள் கிடைக்கும். ஓம் காளி பகவதி அம்மனின் அருள்வாக்கு முன் வாக்கு தான் பின் வாக்கு மாறுவதற்கு சரித்திரத்தில் இடம் இல்லை.

ஓம் காளி பகவதி அம்மனை நாடி வந்தால் அம்மன் உங்களை தேடி வருவார்கள்.

ஓம் அன்பரசு தன மன சுமையை சுமந்து கொண்டு வேம்புலி அம்மனை தேடி போகிறார் அங்கு கண்ணீரால் அபிஷேகம் செய்கிறார் அவர் மன சுமயையும் கண்ணீரையும் வேம்புலி அம்மன் தான் நிறுத்த வேண்டும்.