அம்மன் வரலாறு

பிரம்மாவை நினைத்து பல ஆண்டு காலமாக கடும் தவம் செய்து வருகிறார். பிரம்மா அங்கு தோன்றி தரிகாசூரா உன் தவத்தை பாராட்டுகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தரிகாசுரனும் என்னை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பிரம்மா பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும் எனவே வேறு வரம் கேள் என்று கூறினார். தரிகாசுரனும் சற்று யோசித்து உலகத்தில் ஆண் முகத்தையே பார்க்காமல் 16 வயது நிரம்பிய கண்ணி பெண்ணால் எனக்கு அழிவு ஏற்படும் வகையில் வரம் தர வேண்டும் என்று கூறினான். பிரம்மாவும் அப்படியே தந்தேன் என்று கூறி மறைந்தார். அதன்பிறகு தரிகாசுரனும் உலகத்தில் உள்ளவர்கள் என்னையே வணங்க வேண்டும் சிவனை வணங்க கூடாது என்று அனைவரையும் கொடுமை படுத்தினான். இதை பார்த்த தேவர்கள் அனைவரும் சிவன் மகாவிஷ்ணு பிரம்மா இவர்களிடம் வணங்கி முறையிட்டார்கள் மகா விஷ்ணுவும் தேவர்களை பார்த்து தரிகாசுரனை அழிக்க யாராலும் முடியாது ஆண் முகத்தை பார்க்காமல் 16 வயது கன்னி பெண் ஒருவரால் தான் அரக்கனை அழிக்க முடியும் என்று கூறி பார்வதியை அழைத்து நீ குழந்தையே குறிஞ்சி காட்டில் ஆண் வாடையே இல்லாமல் இருக்கும் பிரம்மாராஸாசசி அவர்களுடைய வளர்ப்பு குழந்தையாக 16 வருடங்கள் வளர்ந்து வா 16 வருடங்கள் கழித்து தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவனை அழைத்து வந்து நடு இரவு 12 மணிக்கு விடியும் முன் சிவ பார்வதி திருமணத்தை நடத்தி வைக்கிறோம் என்று கூறி குறிஞ்சி காட்டிற்கு அனுப்பி வைத்தார். தரிகாசுரனின் அட்டகாசம் அதிகரித்து தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை படுத்தி வந்தான். 16 வருடங்கள் கழித்து தேவர்கள் அனைவரும் மகாவிஷ்னுவிடம் சென்று முறையிட்டார்கள். மகாவிஷ்னுவும் தேவர்களை அழைத்து குறிஞ்சி மலை காட்டில் பார்வதி வளர்ந்து 16 ஆண்டு ஆகிவிட்டது. சிவபார்வதி திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி சிவனையும் தேவர்களையும் அழைத்து கொண்டு குறிஞ்சி மலை காட்டுக்கு சென்றார்கள். அதை பார்த்த நாரதர் அரக்கன் தரிகாசுரனிடம் சென்று உலகத்திலெயெ அழிக வாய்ந்த பெண் குறிஞ்சி காட்டில் இருக்கிறார்கள் அவர்களை சிவனுக்கு திருமணம் செய்ய தேவர்கள் அனைவரும் போய் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினர். அப்படியா அந்த சிவனுக்கு திருமணமா அதற்கு முன் நான் சென்று அந்த பெண்ணை சிறை எடுத்து வருகிறேன் என்று கூறி சென்றான். குறிஞ்சி மலை காட்டில் பார்வதி 16 ஆண்டுகள் இன்று முடிந்து விட்டது. சிவனும் தேவர்களும் இன்று திருமணம் செய்ய வருவார்கள் என்று சந்தோஷத்துடன் காத்து இருந்தார். அப்பொழுது நாரதர் சேவல் அவதாரம் எடுத்து குறிஞ்சி மலை காட்டில் கூவினர். இதை பார்த்த பார்வதி விடியும் முன் வருவேன் 12 மணிக்கு திருமணம் செய்வேன் என்று சிவன் என்னை ஏமாற்றி விட்டார் என்று கோபமாக செல்கிறார் அந்த வழியாக வந்த தரிகாசுரன் இவ்வளவு அழகு நிறைந்த பெண்ணை பார்த்ததில்லை என்று பார்வதியை நெருங்கி வந்தான் பார்வதியும் தரிகாசுரனை பார்த்து டேய் மதிகெட்ட அரக்கா நீ வாங்கிய வரத்தை நினைத்து பார் என்று கூறினர் அரக்கன் அதை உணராமல் பார்வதியை நெருங்கினான் பார்வதியும் கோபமாக அரக்கனை சூலத்தால் குத்தினார் அரக்கன் உடம்பில் இருந்து ரத்தம் வெளியே வந்து ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்து ஒவ்வொரு அரக்கன் உருவாகினான். இதை பார்த்த பார்வதி காட்டேரியாக அவதாரம் எடுத்து அரக்கன் உடம்பில் உள்ள மொத்த ரத்தத்தையும் குடித்து அரக்கன் தலைகளை மாலையாக அணிந்து உடல்களை ஆடையாக அணிந்து ஓம் காளியாக விஸ்ருபமாக நின்றார். இதனால் பூமி அதிர்ந்து பூமியின் பாரம் தாங்காமல் பூமாதேவி பூமியை விட்டு வெளியே வந்தார் அதை பார்த்த நாகசக்தி பூமா தேவிக்கு கொடையாக மாறி ஓம்காளியாக நின்ற அம்மனை ஆராதனை செய்தார்கள் தேவர்களும் அன்னையை பொற்றி அய்யனே போற்றி என்று வர்ஸித்தார்கள் காளியும் தன்னுடைய நெற்றி கண்ணை சிவனுக்கு கொடுத்து சாந்தமாக காட்சி தந்தார்.

04.05.2004 சித்திரை மாதம் 22ம் தேதி சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஓம் காளி பகவதி அம்மன் சிலை செய்து கும்பபிஷகம் செய்தால் அன்று மழைவரும் தண்ணீர் பஞ்சம் தீரும் என்று தெய்வ அருள் கூறியது. அதை மனதில் கொண்டு அன்பரசு சுவாமிகள் சிலை செய்து கும்பபிஷகம் செய்தார் மழையும் வந்தது தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது.

மாதம் மாதம் அன்னதானம் நடைபெறுகிறது 1000 பேர் அன்னதானம் அருந்துகிறார்கள். அன்னதானம் சாப்பிட்டால் நோய் நொடி தீரும்.